
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பாலியல் வன்கொலை செய்ததாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி பிரபாஸ் சந்திரா கூறுகையில்,
அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளி தனது மகளை வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சிறுமி காணாமல் போனதை அறிந்த அவரது குடும்பத்தினர் வயலில் தேடினர். சுயநினைவு அடைந்த பின்னர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையை அணுகினால் சிறுமியைக் கொன்றுவிடுவேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியதாக அவரது தந்தை கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.