
அசாம் மாநிலத்தில், ஒரே குடும்பத்தில் பார்வை இல்லாமல் பிறந்த 19 பேர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி, காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஹித் குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குடும்பத்தினர் அதற்காக மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் அந்தக் குழந்தை கண்பார்வை இல்லாமல் பிறந்துள்ளது. அப்துல் வாஹித் குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக பார்வை இல்லாமல் பிறக்கும் குழந்தைகளால் துவண்டு போயிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 33 பேரில் 19 பேருக்கு பார்வை இல்லை.
வாஹித், படிக்காத, ஏழை நபர். அசாமின் நாகோன் மாவட்டத்தில் சாலைகளில் பிச்சையெடுத்து வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார். தங்களது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக பார்வை இழந்து பிறக்கும் குழந்தைகளை தலையெழுத்து என்று நினைத்து கடந்து சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் குடும்பம் பற்றி 2018ஆம் ஆண்டு மருத்துவர் கோகோய் நடத்திய ஆய்வில், வாஹித் மற்றும் அவரது குடும்பத்தினர் மிக மோசமான மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
மரபணுவில் ஒரு பிழை
உலகம் முழுவதும் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், இவர்களது குடும்பத்தினரின் மரபணுவை பரிசோதித்து ஆய்வயிற்க்கையை அளித்துள்ளனர்.
அதில், குடும்பத்தில் மூன்று பேருக்கு பாதோஜெனிக் மரபணுவில் (ஜிஜேஏ8 மரபணு) கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு தலைமுறையாக கண்பார்வை கோளாறு ஏற்படக் காரணமான இருந்த இந்தக் கோளாறுதான் இவர்களுக்கும் வந்துள்ளது. வாஹித்தின் குடும்பம் இந்தக் கோளாறுடன் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்காவது தலைமுறை என்கிறார் டாக்டர் கோகோய்.
இதையும் படிக்க | உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
இதேப்போன்று சிட்னி மருத்துவமனை ஆய்வகத்திலும் மூன்று பேருக்கு இதுபோன்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கருவாக இருக்கும் போதே, கண் விழிகள் முழுமையாக உருவாகாமல் போயிருப்பதும், வேறு எந்த நரம்பு மற்றும் பார்வை இழத்தலுக்கான பிரச்னையும் அவர்களுக்கு இல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஹித் குடும்பத்தில் இரு யார் கருவுற்றாலும் அவர்களது கருவின் மரபணுவை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில், ஒரு சில ஆண்டுகளில், இவர்களது குடும்பத்தில் இருக்கும் இந்த மரபணு கோளாறு களையப்படும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால், அவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் இல்லை என்பதாலும், இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் செலவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.