உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர் வருங்கா வைப்பு நிதி திட்டத்தில் கடனும் வழங்கப்படுகிறது.

உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையை 5 வழிகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். 

1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் பயனாளர்களுக்கு தனித் தனி அடையாள எண் வழங்கப்படும். அது யுஏஎன் என்று கூறப்படுகிறது. ஒரு பயனாளருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு அடையாள எண்தான். நிறுவனங்கள் மாறினாலும் இந்த எண் மாறாது. உங்களது யுஏஎன் செயல்பாட்டில் இருந்தால், இபிஎஃப் ஓ இணையதளமான  http://www.epfindia.gov.in என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
அதில் 'our services' என்பதை தேர்வு செய்து, அதில் விரியும் பட்டியலில் 'for employees' என்ற இரண்டாவது வாய்ப்பை க்ளிக் செய்யவும்.  

புதிதாக வரும் பக்கத்தில் 'Member Passbook' என்பதை க்ளிக் செய்தால் லாக்-இன் பக்கம் வரும். உங்கள் யுஏஎன் எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிடவும். இதைச் செய்தாலே போதும். உங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.

***

2. குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வழி
உங்களது யுஏஎன் எனப்படும் அடையாள எண்ணுடன் உங்களது தனிநபர் விவரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தால் குறுந்தகவல் மூலமாகவே பி.எஃப். விவரங்களை அறியலாம்.

1. 7738299899 என்ற எண்ணுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
2. உங்கள் செல்லிடப்பேசியில் 'EPFOHO UAN TAM' என்று டைப் செய்து அனுப்பினால் போதும். TAM என்பது தமிழில் விவரங்கள் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆங்கிலத்தில் என்றால் இஎன்ஜி என்றும், தெலுங்கு என்றால் டிஇஎல் என்றும் டைப் செய்து அனுப்பினால், உங்கள் செல்லிடப்பேசிக்கு விவரங்கள் குறுந்தகவலில் வந்து சேரும்.

***

தவறி அழைப்பு மூலமாகவும் அறியலாம்

1. 044 - 22901406 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து மிஸ்டுகால் கொடுத்தால் அந்த அழைப்பு துண்டிக்கப்படும்.
2. உடனடியான உங்கள் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் தெரியவரும்.


***

4. செயலி இருக்க பயமேன்?

உங்கள் செல்லிடப்பேசியில் உமங் அல்லது இபிஎஃப்ஓ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

1. Employee centric services என்பதை தேர்வு செய்து, view passbook என்ற வாய்ப்பை க்ளிக் செய்யுங்கள். 

3. பிறகு உங்கள் யுஏஎன் மற்றும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் கணக்கின் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்.
 

***

5. யுஏஎன் எனும் அடையாள எண் இல்லாதவர்கள் கணக்கு விவரங்களை அறியும் வழி..

1. www.epfindia.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.

click here to check your PF Balance  என்பதை தேர்வு செய்யவும்.
மாநிலம், முதன்மை அலுவலகம், வணிக நிறுவனத்தின் கோடு, பிஎஃப் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.  
பிறகு I agree என்பதை அழுத்தி, உங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com