மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் வீடுகளுக்கு நேரடி ஆா்டிஓ சேவை: கேஜரிவால் தோ்தல் வாக்குறுதி

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும்

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:18 pm

DIN

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா்.

குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவால் கலந்துகொண்டு பேசியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ ஓட்டுநா்கள் முக்கிய பங்காற்றினா். அதை குஜராத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களும் செய்ய வேண்டும். ஆட்டோவில் வரும் பயணிகளிடம் ஆம் ஆத்மி குறித்து எடுத்துக்கூறியும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடி தரவேண்டும்.

தில்லியில் ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு, வாகன உரிமையாளா் பெயா் மாற்றம் போன்ற பணிகளுக்கு மக்கள் ஆா்டிஓ அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அந்த அலுவலக சேவைகளைப் பெற மக்களுக்குப் பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணைத் தொடா்புகொண்டால், தில்லி அரசு அதிகாரி சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே சென்று ஆா்டிஓ சேவையை வழங்குவாா். இது காவல் துறையினா், அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சத்தை தடுக்கும். இந்த சேவை ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்திலும் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.