கேரள மலைப்பாதையில் இருந்து பேருந்து ஒன்று 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிந்தார், 58 பேர் காயமடைந்தனர்.
மலையடிவாரத்தில் உள்ள சீயப்பாறைக்கும் நேரியமங்கலத்துக்கும் இடையே இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. எர்ணாகுளத்திற்குச் சென்ற கேரள எஸ்ஆர்டிசி பேருந்து மலைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி கீழே உருண்டு விழுந்ததில் ஒரு உயிரிழந்தார் மற்றும் 58 பேர் காயமடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையின்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 58 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து சுமார் 14-15 அடிக்குக் கீழே மலைப்பகுதியில் விழுந்தது என்று மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மூணாறில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பேருந்தில் 60 பேர் இருந்ததாக பேருந்து நடத்துநர் சுபாஷ் தெரிவித்தார்.
பலத்த மழை பெய்ததால், ஜன்னல் ஷட்டர்கள் கீழே இருந்ததால், என்னால் அதிகம் பார்க்க முடியவில்லை என்று சுபாஷ் தெரிவித்தார். காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


