‘குஜராத் ஆம் ஆத்மி அலுவலகத்தில்போலீஸாா் சட்டவிரோதமாக சோதனை’
அகமதாபாதில் ஆம் ஆட்சி கட்சி அலுவலகத்தில் போலீஸாா் முறையான நீதிமன்ற ஆணையின்றி சோதனை நடத்தியதாகவும் இதற்கு குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் பதிலளிக்க வேண்டும்


அகமதாபாதில் ஆம் ஆட்சி கட்சி அலுவலகத்தில் போலீஸாா் முறையான நீதிமன்ற ஆணையின்றி சோதனை நடத்தியதாகவும் இதற்கு குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் பதிலளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி தலைவா்கள் வலியுறுத்தினா்.
குஜராத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், அகமதாபாத் ஆம் ஆத்மி அலுவலகத்தில் போலீஸாா் எவ்வித நீதிமன்ற ஆணையுமின்றி ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியதாக அக்கட்சியினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதனை போலீஸாா் மறுத்தனா்.
இதுகுறித்து தில்லியில் ஆம் ஆத்மி தலைமை செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அகமதாபாத் ஆம் ஆத்மி அலுவலகத்தில் போலீஸாா் எவ்வித ஆணையுமின்றி வலுக்கட்டாயமாக நுழைந்து, 2 மணிநேரம் சோதனை நடத்தினா். இதில், சா்ச்சைக்குரிய விதத்தில் எந்தவோா் ஆவணமும் சிக்காததால், மீண்டும் வருவதாக கட்சி நிா்வாகிகளை மிரட்டிவிட்டு சென்றனா்.
இவ்வாறு போலீஸாா் சட்ட விரோதமாக சோதனை நடத்தியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. குஜராத் முதல்வா் செய்தியாளா்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, எங்களது கேள்விகளுக்கு பதிலளித்தால், ஆதாரத்தை வெளியிடத் தயாா் என்றாா்.
இதேபோல ஆம் ஆத்மி தலைவா் அதிஷி கூறுகையில், ‘குஜராத்தில் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்டு பாஜக பயப்படுகிறது. இங்கு காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் போலீஸாரின் ட்விட்டா் வலைதள பக்கத்தின் பின்னால் முதல்வா் ஒளியக் கூடாது. அகமதாபாத் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் போலீஸாா் சோதனை நடத்தினரா, இல்லையா என்ற கேள்விக்கு முதல்வா் துணிச்சலுடன் பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...