ஆம்புலன்ஸ் தாமதம்: விபத்தில் சிக்கியவரை ஜேசிபியில் தூக்கிச் சென்ற மக்கள்(விடியோ)

ஆம்புலன்ஸ் தாமதம்: விபத்தில் சிக்கியவரை ஜேசிபியில் தூக்கிச் சென்ற மக்கள்(விடியோ)

விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், காயமடைந்தவரை ஜேசிபியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், காயமடைந்தவரை ஜேசிபியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயமடைந்தவரை தூக்கிச் சென்று அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில்,

ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்ததால் தாமதமானது. இப்பகுதியில் புதிய ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே ஜேசிபியில் காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com