ஜம்மு-காஷ்மீரில் முதல் மின்சார ரயில் சேவை: அக்.2ஆம் தேதி தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் காந்தி ஜெயந்தி அன்று முதல்முறையாக மின்சார ரயில் சேவை இயக்கம் தொடங்கப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.  
ஜம்மு-காஷ்மீரில் முதல் மின்சார ரயில் சேவை: அக்.2ஆம் தேதி தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் காந்தி ஜெயந்தி அன்று முதல்முறையாக மின்சார ரயில் சேவை இயக்கம் தொடங்கப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. 

137 கி.மீ நீளமுள்ள பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் மின்சார ரயில் இயக்கம் தொடங்குகிறது. இந்த திட்டத்திற்கான பணிகள் ஆகஸ்ட் 2019 முதல் நடைபெற்று வருவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மின்சார ரயில் இணைப்புக்கான முதன்மை தலைமை மின் பொறியாளர் கூறுகையில், 

இதற்கான ஆய்வு செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறும், காந்தி ஜெயந்தி அன்று ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

137 கி.மீட்டர் நீளமுள்ள மின்சார ரயில் இணைப்பின் பாரமுல்லா-புத்காம் பகுதியின் சோதனைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. மேலும், புத்காம்-பனிஹால் பகுதிக்கான சோதனை செப்டம்பர் 20 அன்று மேற்கொள்ளப்படும். ரூ.324 கோடி செலவில் பனிஹாலில் இருந்து பாரமுல்லா வரை ரயில் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

பனிஹால்-பாரமுல்லா ரயில் இணைப்பின் மின் மயமாக்கல் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் மற்றும் செயல்பாட்டுச் செலவை 60 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com