
இந்திய கடலோர காவல்படையினருடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய கூட்டு நடவடிக்கையில், குஜராத் கடற்கரையின் அரபிக்கடலில் பாகிஸ்தான் மீன்பிடி படகிலிருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
படகிலிருந்து 6 பாகிஸ்தானிய பணியளார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாகாவ் துறைமுகத்திற்கு அருகே கடலோர காவல்படை மற்றும் ஏடிஎஸ் ஆகியவற்றின் கூட்டுக் குழுவினரால் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற மின்பிடி படைகை நடுக்கடலில் தடுத்து நிறுத்தியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஹெராயின் குஜராத் கடற்கரையில் இறக்கப்பட்ட பின்னர் சாலை வழியாக பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட இருந்தது. கடலோர காவல்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட படைகை தடுத்துநிறுத்தி, 40 கிலோ ஹெராயினுடன் ஆறு பாகிஸ்தானியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகுடன் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் ஜாகாவ் கடற்கரையை அடைவார்கள் என்று அவர் கூறினார்.
மாநில ஏ.டி.எஸ் மற்றும் கடலோர காவல்படை கடந்த காலங்களில் இதேபோன்ற போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்து, குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டினரைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.