ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!

காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் ஓடிடி தேதி...

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 3:39 pm

நடிகர் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவானது.

இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வானது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜன. 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

வசனங்களே இல்லாத காட்சிகளாக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில், காந்தி டாக்ஸ் திரைப்படம் வருகிற மார்ச் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.