புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,45,16,479 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.10 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | கார் விபத்தில் சிக்கிய ஸெலென்ஸ்கி: சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்!
மேலும், 14 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,250 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேர் இறந்துள்ளனர்.
கரோனாவிலிருந்து மேலும் 5,748 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,39,41,840 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2,15,98,16,124 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 31,09,550 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



