‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்

தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 
‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்
‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்


தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக புத்தகம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை அந்த நூல் விவரிக்கிறது.

அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

நூல் வெளியீட்டுக்கு முன், தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை விளக்கும் கண்காட்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com