கியூட்தேர்வு முடிவு வெளியீடு: 30 பாடங்களில் 20,000 மாணவர்கள் சதம்!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுகளில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் 30 பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவலில், 

ஆங்கிலத்தில் 8,236 பேரும், அதைத் தொடர்ந்து அரசியல் அறிவியல் 2,065 பேரும், வணிக ஆய்வுகள் 1,669, உயிரியல் 1.324 மற்றும் 1,188 பேர் பொருளாதாரத்திலும் 100 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

இந்த தேர்வில் உத்தரப் பிரதேசத்திலிருந்து 2,92,589 மாணவர்களும், தில்லியிலிருந்து 1,86,405 மாணவர்களும், மேகாலயாவிலிருந்து 583 மாணவர்களும் மட்டுமே தேர்வெழுதினர்.

என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் 90 நாள்களுக்கு இணையதளத்தில் இருக்கும்.

நகரின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 91 பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கட்-ஆஃப் பட்டியலைத் தயாரித்துவருகின்றது. 

ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய தேர்வுகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 14.90 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 

தவிர, கியூட்-இளங்கலை தேர்வுகள் மஸ்கட், ரியாத், துபாய், மனமா, தோஹா, காத்மாண்டு, ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் குவைத் போன்ற வெளிநாட்டு நகரங்களிலும் நடத்தப்பட்டன.

இந்தியாவில், 239 நகரங்களில் உள்ள 444 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இம்முறை, தில்லி பல்கலைக்கழகம் உள்பட அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை கியூட் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com