மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தென்மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் அமைச்சர்கள், தொழில்துறையினர் பங்கேற்றுள்ளனர். 

இந்த மாநாட்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன. 

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்கள் புத்தாக சிந்தனையுடன் உருவாக்கிட பள்ளிப்புத்தாக்க ம்ம்பாட்டுத் திட்டம் எனும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பின்னர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் வளர வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். 

மதுரையில் இயங்கி வரும் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற 42 பொருள்களில் 18 பொருள்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை. 

நாட்டில் எளிமையான தொழில் புரிவோர் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து பேசிய முதல்வர், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்தார்

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து 5 ஏக்கரில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என கூறிய முதல்வர் ஸ்டாலின், மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும், இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

‘டைடல் பார்க்’ மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com