மின்கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்தும் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவுடன் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு கடந்தஸ் செப். 10 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.