
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,298 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,45,22,777 ஆகவும், வியாழக்கிழமை தொற்று பாதிப்பு 6,422 என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது!
கடந்த 24 மணி நேரத்தில் 5,916 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,47,756 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,273 பேர் ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை 2,16,17,78,020 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 19,61,896 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.