‘பிரதமர் மோடி அம்பேத்கரின் உண்மையான பற்றாளர்’: ராம்நாத் கோவிந்த்

பிரதமர் நரேந்திரமோடி அம்பேத்கரின் தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
‘பிரதமர் மோடி அம்பேத்கரின் உண்மையான பற்றாளர்’: ராம்நாத் கோவிந்த்

பிரதமர் நரேந்திரமோடி அம்பேத்கரின் தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி அம்பேத்கரை உண்மையான முறையில் பின்பற்றி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “முதலில் நாம் இந்தியர்கள் என்றும் பின்னர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்றும் சொல்ல வேண்டும் என்று பெரும் பகுதி தலைவர்கள் தெரிவித்து வந்த நிலையில் அம்பேத்கரின் சிந்தனை உயர்ந்த நிலையில் இருந்தது. முதலில் இந்தியன், பிறகு இந்தியன், கடைசி வரை இந்தியன் என்று சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியத் தன்மையே நமது உண்மையான அடையாளம். மதம், ஜாதி உள்ளிட்ட பிரிவுகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்தார். 

மேலும், “அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் முன்மொழிவை நிராகரித்தார். எனினும் சிக்கலான சூழலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இது அம்பேத்கரின் விருப்பத்திற்கு எதிரானது.

தற்போது ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அம்பேத்கரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அம்பேத்கரின் தொலைநோக்கு திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்” என்று ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com