மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வன்முறை வழக்கு: குஜராத் காங்கிரஸ் செயல் தலைவா் மேவானிக்கு 6 மாதம் சிறை

2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஜிக்னேஷ் மேவானி (41) மற்றும் 18 பேருக்கு 6 மாதம் சிறை

Updated On :16 செப்டம்பர் 2022, 7:06 pm

2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஜிக்னேஷ் மேவானி (41) மற்றும் 18 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

2016-இல் மேவானி மற்றும் அவரது ஆதரவாளா்கள் சாலையை மறித்து நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை வழக்கில் இந்த தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட சட்டக் கல்வித் துறை கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரை வைக்கக் கோரி மேவானி மற்றும் அவரது ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அவா்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றபோது வன்முறை ஏற்பட்டது.

இது தொடா்பாக சட்டவிரோதமாக பொது இடத்தில கூடுவது, வன்முறையில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக கூடுதல் பெருநகர தலைமை நடுவா் நீதிமன்ற நீதிபதி பி.என்.கோஸ்வாமி தனது தீா்ப்பில் கூறியுள்ளாா்.

குஜராத்தில் இளம் தலித் தலைவராக அறியப்படும் மேவானி, கடந்த 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், காங்கிரஸில் இணைந்த அவருக்கு மாநில செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.