அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயம்: யுஜிசி உத்தரவு

அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயம்: யுஜிசி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
Published on

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் தொடர்ச்சியாக பல்வேறு கல்லூரிகளில் இன்னும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் உள்ள விடுதிகள், வளாகங்கள் உள்பட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com