கொச்சியில் ராகுல் காந்தி! 14வது நாள் நடைப்பயணம்

கேரள மாநிலம், கொச்சியில் தனது 14வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டு வருகிறார்.
கொச்சியில் ராகுல் காந்தி! 14வது நாள் நடைப்பயணம்
Updated on
1 min read

கேரள மாநிலம், கொச்சியில் தனது 14வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டு வருகிறார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கொச்சி மாவட்டம் கும்பலம் சுங்கச்சாவடி அருகேவுள்ள நாராயண குரு படத்திற்கு இன்று காலை 6.25 மணியளவில் மரியாதை செலுத்திய பிறகு இன்றைய நடைப்பயணத்தை தொடர்ந்தார்.

காலை 11.30 மணிக்கு எடப்பள்ளியில் ஓய்வெடுக்கும் நடைப்பயண குழுவினர், மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகின்றனர். இரவு 7 மணிக்கு அலுவாவில் இன்றைய பயணத்தை முடிக்கின்றனர்.

இன்றைய பயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com