
தில்லியில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நகரத்தில் 15 மி.மீ மழை பெய்துள்ளது.
வியாழனன்று பெய்த இடைவிடாத மழை காரணமாக தேசிய தலைநகரில் உள்ள சாலைகள் குட்டைகள் போல் காட்சியளித்தன. மேலும் பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலைத் துறை சனிக்கிழமையும் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 22.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது, இது இயல்பை விடக் குறைவாக உள்ளது. சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.