
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2013-2016 வரையிலான காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பாவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செபி விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றும் அலுவலர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணா மார்ச் 6-ம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றக் காவலில் இருந்தனர்.
பங்குச் சந்தையை உலுக்கிய, பதில் கிடைக்காத பல நூறு கோடி மதிப்பிலான என்.எஸ்.இ முறைகேட்டில் சம்பந்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சித்ரா ராமகிருஷ்ணன், தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி தாக்கல் செய்தார். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்கி தில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.