பாஜக அரசு விளம்பரத்திற்காக பணத்தை வீணடிக்கவில்லை: பிரதமர் மோடி

பாஜக தலைமையிலான குஜராத் மாநில அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்கவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு விளம்பரத்திற்காக பணத்தை வீணடிக்கவில்லை: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

பாஜக தலைமையிலான குஜராத் மாநில அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்கவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜாரத்தின் பாவ்நகர் பகுதியில் ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடக்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சௌராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசன திட்டத்தினை செயல்படுத்தியதன் மூலம் என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் நினைப்பது தவறு எனவும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ நாங்கள் இதை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமுமின்றியும், மக்கள் பணத்தில் வீண் விளம்பரங்கள் இல்லாமலும் செய்து முடித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மட்டுமே ஆட்சி என்பது தேவைப்படுகிறது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் நான் மற்றவர்கள் அனைவரும் நினைப்பது தவறு என நிரூபித்துள்ளேன். பலரும் இந்தத் திட்டத்தை தேர்தலுக்காக மட்டுமே அறிவிக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் கூறியது தவறு என்பது இன்று நிரூபணமாகிவிட்டது. நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்.” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com