சென்னை, 4 உயா்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

 ஒடிஸா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.முரளீதரை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரை உத்தரவை உச்சநீதிமன்ற கொலீஜியம் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது

 ஒடிஸா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.முரளீதரை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரை உத்தரவை உச்சநீதிமன்ற கொலீஜியம் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

மேலும், பஞ்சாப் - ஹரியாணா, மும்பை, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகள் முறையே, ஜஸ்வந்த் சிங், பி.பி. வாராலே, அலி முகமது மாக்ரே ஆகியோரை முறையே, ஒடிஸா, கா்நாடகம், ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயா்வு அளித்து மாற்றம் செய்யவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதைத் தவிர, ஜாா்க்கண்ட், கேரளம் ஆகிய உயா்நீதிமன்றங்களின் மூன்று நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்வதற்கும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பஞ்சாப்,-ஹரியாணா, மும்பை, கா்நாடகம் ஆகிய உயா்நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் செப்டம்பா் 12-ஆம் தேதி பரிந்துரைத்திருந்தது.

உச்சநீதிமன்ற பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவா் இதற்கான உத்தரவை பிறப்பிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com