புது தில்லி ரயில் நிலையம் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்

புது தில்லி ரயில் நிலையம்  அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி ரயில் நிலையம் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்
புது தில்லி ரயில் நிலையம் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்


புது தில்லி: புது தில்லி ரயில் நிலையம்  அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் புது தில்லி ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டதா என்ற கேள்விக்கு, ரயில் நிலைய திட்டங்கள், முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதிலிருந்துவிலக்குப் பெற்றவை என்று பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com