இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய ரஷியா

இந்தியா தங்களிடம் ஏதேனும் வாங்க விரும்பினால், அதுகுறித்து பேசி பரஸ்பரம் ஏற்றுகொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியாவின் 'சுதந்திரமான' வெளிநாட்டு கொள்கையை தொடர்ந்து பாராட்டி பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா தங்களிடம் ஏதேனும் வாங்க விரும்பினால், அதுகுறித்து பேசி தயாராக இருப்பதாக கூறினார்.

அரசுமுறை பயணமாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ளதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா ரஷியாவிடமிருந்து ஏதேனும் வாங்க விரும்பினால், அதை விநியோகம் செய்ய தயாராக இருக்கிறோம். 

அதுகுறித்து பேசி பரஸ்பரம் ஏற்றுகொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் ஈடுபட தயாராக இருக்கிறோம்" என்றார். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், மேற்குலக நாடுகள் கடும் அழுத்தும் தந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 

ரஷியாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இரு நாட்டு தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் ரூபாய் மற்றும் ரஷியாவின் ரூபிளை கொண்டே இரு நாட்டு வர்த்தகத்தை மேற்கொள்வதில் இரு நாடுகளும் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com