டேஹ்ராடூனைச் சேர்ந்த 78 வயதாகும் புஷ்பா முஞ்சியால் என்ற மூதாட்டி, தனது பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது யோசனைகளும் இந்த நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று கருதியதால், தனது சொத்துகளை அவரது பெயருக்கு எழுதி வைத்திருப்பதாக புஷ்பா கூறியுள்ளார்.
தனக்குச் சொந்தமான தங்க நகைகளும், 50 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இதில் அடங்கும். இது குறித்து அவர் கூறுகையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது இன்னுயிரை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தனர். தற்போது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த நாட்டுக்கு சேவை செய்ய தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூதாட்டி புஷ்பா எழுதியிருக்கும் உயில், முன்னாள் மாநில தலைவர் பிரீதம் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









