
மீண்டும் உயருகிறதா கரோனா தொற்று? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
தில்லி, கேரளம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அம்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கரோனா தொற்று பரவலானது நாடு முழுவதும் குறைந்துள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களும் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளன.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா
அதேசமயம் கடந்த வாரம் தில்லி, ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் 5 மாநில அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினார்.
அதில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...