

தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து மலர்க்கண்காட்சியை நடத்தி வருகிறது.
தேக்கடியில் கடந்த 2006 முதல் நடத்தப்பட்டு வரும் மலர்க்கண்காட்சி கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது தேக்கடி- குமுளி சாலையில் கல்லறைக்கல் மைதானத்தில், மீண்டும் மலர்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க- அசாமிலிருந்து துபைக்கு பறக்கும் பலாப்பழம், பச்சைமிளகாய்
மேலும் யானை, ஒட்டகம், காட்டெருமை, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் தத்துவ வடிவமைப்பும் குழந்தைகளை கவரும் வகையில் அமைத்துள்ளனர். இதுகுறித்து தேக்கடி மலர் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில், கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேக்கடி சுற்றுலா மையத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் போக்கும் வகையில் இக்கண்காட்சி மே 2 வரை நடைபெறும்.
கண்காட்சியில், நாள்தோறும் வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டி, சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டு போட்டிகள், வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் போன்றவை நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.