‘கூட்டணிக்கு மாயாவதி மறுத்துவிட்டார்’: ராகுல்காந்தி

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாயாவதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
‘கூட்டணிக்கு மாயாவதி மறுத்துவிட்டார்’: ராகுல்காந்தி

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாயாவதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடவதற்கான வாய்ப்பை மாயாவதி மறுத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தலித் உண்மைகள் எனும் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, “அரசியலமைப்பு என்பது இந்தியாவின் ஆயுதம். ஆனால் சரியான நிர்வாகம் இல்லாமல் அதற்கு மதிப்பில்லை. நாம் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என பேசி வருகிறோம். ஆனால் அது இந்த நிர்வாகத்தின் மூலம்தான் அமல்படுத்தப்பட முடியும். இன்றைக்கு அரசின் அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கைகளில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

“இது இன்றைக்கு மட்டுமான பிரச்னை இல்லை. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிலிருந்து இது தொடங்குகிறது.பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உளவு பார்க்கப்படுகின்றனர். ஊடகங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளன” என ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை, சிபிஐ, பெகாசஸ் உளவு விவகாரம் போன்ற பிரச்னைகளால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வெல்வதற்கு மாயாவதி தெளிவான பாதையை போட்டுக் கொடுத்தார். தேர்தல் இணைந்து போட்டியிட மாயாவதிக்கு அழைப்பு விடுத்தோம். முதல்வர் வேட்பாளராக அவரை முன்மொழியவும் தயாராக இருந்தோம். ஆனால் மாயாவதி அதனை மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

“இதுதான் இந்தியாவின் உண்மைநிலை. அரசியலமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டால் தலித்துகளும், சிறுபான்மையினரும், பழங்குடியினரும், ஏழைகளும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர்” என ராகுல்காந்தி பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com