
ஸ்மிருதி இரானி / நெட்டா
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா கேள்வி எழுப்பியுள்ளார்.
விமானத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்மிருதி இரானி அளித்த பதிலையும் விடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.
நாட்டில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் உள்பட பலர் எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
படிக்க | 'உன்னை மறக்கமாட்டேன்': உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமியின் கடிதம் வைரல்
இந்நிலையில், மத்திய பெண்கள், சிறாா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியை, அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா விமானத்தில் சந்தித்துள்ளார்.
அப்போது பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதில் கூறாமல், நெட்டா எனது பாதையில் இடையூறு செய்வதாக ஸ்மிருதி பதிலளித்துள்ளார். இதனை நெட்டா தனது சுட்டுரையில் விடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
மேலும், ''பொய் கூறாதீர்கள். கடந்த 16 நாள்களில் 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பதில் கூறுங்கள்'' என்று விடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
गुवाहाटी की फ़्लाइट में @smritiirani जी से सामना हुआ।
— Netta D'Souza (@dnetta) April 10, 2022
रसोई गैस की लगातार बढ़ती क़ीमतों पर सुनिए उनके जवाब
महँगाई का ठीकरा,वे किन-किन चीज़ों पर फोड़ रहीं हैं !
जनता पूछे सवाल, स्मृति जी दें टाल !
वीडियो के अंशों में ज़रूर देखिये, मोदी सरकार की सच्चाई ! pic.twitter.com/fyV6ossGZm
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...