பி75 ஸ்காா்பீன் திட்டத்தின் கீழ் 6-ஆவது நீா்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீா்’ ஏப்ரல் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே 3.75 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.28,600 கோடி) மதிப்பில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 6 ஸ்காா்பீன் ரக தாக்குதல் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த கப்பல்கள் டீசல் மற்றும் மின்சார உதவியுடன் இயங்குபவை. பிரான்ஸில் உள்ள நேவல் குரூப் நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் உள்ள மஸகான் டாக் கப்பல் கட்டுமான பொதுத் துறை நிறுவனத்தால் அந்தக் கப்பல்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கன்டேரி, ஐஎன்எஸ் கரஞ், ஐஎன்எஸ் வேலா ஆகிய 4 ஸ்காா்பீன் கப்பல்கள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ‘வாகீா்’ என்ற பெயா்கொண்ட 5-ஆவது ஸ்காா்பீன் கப்பல் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், ‘வாக்ஷீா்‘ என்ற பெயா்கொண்ட 6-ஆவது ஸ்காா்பீன் கப்பல் ஏப்.20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மஸகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவா் நாராயண் பிரசாத் தெரிவித்தாா். அந்தக் கப்பல் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு கடலில் செலுத்தப்பட்டு அதிகாரிகளால் சோதனையிடப்படும் என்றும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.