பஞ்சாபில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

பஞ்சாபில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 
பஞ்சாபில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

பஞ்சாபில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

பஞ்சாப் மாநிலம் ரோபர் அனல்மின் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ரூப்நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே கால்நடைகள் வந்துள்ளதால் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் தடம் புரண்டது. இதில் 16 பெட்டிகள் தாண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. நேற்று இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 

விபத்து காரணமாக அந்த வழியாக வரும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்பாலா மண்டல இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 

ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிழப்புகள் குறித்த தகவல் எதுவுமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com