
கரோனா பெருந்தொற்றில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள சுகாதார காப்பீடு திட்டத்தை அடுத்த 180 நாள்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி கரோனா பரவலுக்கிடையே பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் ஏப்ரல் 19ஆம் தேதி 2022 முதல் 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனாவுக்கு எதிராக பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் அடுத்த 180 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து குணப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காப்பீடுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
படிக்க | தில்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர், யூனியன் பிரதேச சுகாதாரத் துறை போன்றவற்றிற்கு கடிதம் வாயிலாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை சுகாதாரப் பணியாளர்கள், அரசுத் துறை சுகாதாரப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மத்திய அரசின் இந்த காப்பீடு திட்ட நீட்டிப்பு பொருந்தும். இத்திட்டத்தின் மூலம் சுகாதாரப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. 22.12 லட்சம் வரை மருத்துவ செலவும் செய்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...