கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..

கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..
கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..


புது தில்லி: கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களில் அதிகம்பேர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்தான் என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், நல்வாய்ப்பாக, கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் குறைவு என்பதே தற்போதைக்கு ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

தற்போது நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும், பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்கிறார்கள். ஆனால், நான்காவது அலை உருவாகும் அபாயம் குறைவுதானாம்.

குருகிராமைச் சேர்ந்த மருத்துவர் சுஷீலா கட்டாரியா கூறுகையில், நகரப் பகுதிகளிலேயே கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. காரணம், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலேயே. பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு அனுமதி, முகக்கவசம் கட்டாயமில்லை என்பது போன்ற தளர்வுகளால்தான் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்.

தற்போது கரோனா பாதிப்பு கண்டறியப்படுவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களாக உள்ளனர். நாட்டில் முதல் அல்லது இரண்டாவது அலையின் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது மீண்டும் கரோனா உறுதி செய்யப்படுவது குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையும் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால், கரோனா மோசமடைவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் 100 சதவீதம் கரோனா பாதிப்பை தடுப்பூசி தடுத்துவிடாது, நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com