மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 20.16 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பு: மத்திய அரசு

20.16 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பு உள்ளதாக மத்திய சுகாதார மற்றும்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 20.16 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பு: மத்திய அரசு

புதுதில்லி: 20.16 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பு உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு  நேரடி மாநில கொள்முதல் மூலம் இதுவரை 192.27 கோடி(1,92,27,23,625) தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20.16 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பு உள்ளதாக மேலும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாடு தழுவிய கரோனா தடுப்பூசி ஜனவரி 16, 2021 அன்று தொடங்கியது. கரோனா தடுப்பூசியின் உலகளாவியமயமாக்கலின் புதிய கட்டம் ஜூன் 21, 2021 அன்று தொடங்கியது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

அதிக தடுப்பூசிகள் கிடைப்பதன் மூலமும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தடுப்பூசிகளின் மேம்பட்ட தெரிவுநிலையின் மூலமும் தடுப்பூசி இயக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com