ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்ததால் தேர்வெழுதாமல் வெளியேறிய இஸ்லாமிய மாணவிகள்

தேர்வின் நுழைவு சீட்டை பெற்று கொண்ட மாணவிகள், தேர்வை எழுதுவதற்கு ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் விவாத பொருளாக மாறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹிஜாப் அணிந்த செல்ல அனுமதி மறுத்ததால் இரண்டு இஸ்லாமிய மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதாமல் பள்ளியிலிருந்து வெளியேறினர். 

வகுப்புகளில் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்கு தொடர்ந்த இரண்டு மாணவிகளான அலியா அசாதி, ரேஷாம் ஆகியோர் தேர்வை எழுதாமல் புறக்கணித்துள்ளனர். 

தேர்வின் நுழைவு சீட்டை பெற்று கொண்ட மாணவிகள், தேர்வை எழுதுவதற்கு உடுப்பியில் உள்ள வித்யோதயா பி.யு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்றனர். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கல்லூரி முதல்வர், தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் கிட்டத்தட்ட 45 மணி நேரம் அவர்கள் பேசியுள்ளனர். பலன் எதுவும் கிட்டாததால் தேர்வு எழுதாமலேயே அவர்கள் வீடு திரும்பினர். 

சீருடை பரிந்துரைக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆணை செல்லும் என நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. 6,84,255 மாணவர்களுக்கு, தேர்வுக்காக பதிவு செய்துள்ளனர் என கர்நாடக கல்வித்துறை தெரிவித்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கிடையே மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.

முன்னதாக, ஹிஜாப் அணிந்து தேர்வை எழுத அமைச்சருக்கு இஸ்லாமிய மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை மறுத்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறியிருந்தார். 

ஹிஜாப் போராட்டத்தை முன்னின்று நடத்திய 17 வயது மாணவியான அலியா அசாதி, கடந்த வாரம் முதல்வர் பசவ்ராஜ் பொம்மைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மாநில அளவில் கராத்தே சாம்பியனான அலியா, "பொது தேர்வை எழுத விரும்பும் மாணவிகளை பாதிக்கும். எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்கு உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com