காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு

காங்கிரஸில் இணைய தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு
காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு

காங்கிரஸில் இணைய தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரன்தீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“பிரசாந்த் கிஷோர் பரிந்துரைகளை அளித்த பிறகு பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழு அமைத்துள்ளார். காங்கிரஸில் சேரவும், அதிகாரம் பெற்ற குழுவில் இணையவும் பிரசாந்த் கிஷோருக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.கட்சிக்கு அவர் ஆலோசனைகளை நாங்கள் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலும், வரும் 2024-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கட்சித் தலைமை இறங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அந்த ஆலோசனைகள் குறித்து ஆராய்ந்த 8 போ் கொண்ட காங்கிரஸ் குழு, கடந்த வாரம் தங்களது அறிக்கையை தலைமையிடம் வழங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சோ்த்துக் கொள்வது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்திய நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com