எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: பிரதமர் மோடி 

எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வலியுறுத்தினார்.
எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: பிரதமர் மோடி 

புது தில்லி: எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வலியுறுத்தினார்.

கரோனா தொடர்பான மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

"பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். சில வரிகளை குறைத்துள்ளது. இதனால் சில மாநிலங்கள் மக்களுக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை. 

தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வரிகளைக் குறைத்த மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது" என்று கூறினார்.

எரிபொருள் மீதான வாட் வரி உயர்வின் போது குறைக்காத மாநிலங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, "நான் யாரையும் விமர்சிக்கவில்லை, விவாதிப்பேன்" என்றார்.

பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநிலங்கள்தான் வாட் வரியை வெவ்வேறு அளவுகளில் குறைத்து உள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எரிபொருள் மீதான வரியை குறைக்கவில்லை என்று கூறினார்.


வாட் வரியைக் குறைப்பதன் மூலம் கர்நாடகம் மற்றும் குஜராத் முறையே கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி மற்றும் ரூ. 3,500-4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை மக்களுக்கு உதவுவதாக பிரதமர் மோடி கூறினார்.


மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் வாட் வரி குறைக்கப்படவில்லை. பிற  மாநிலங்களை விட விலை அதிகமாக உள்ளது என்று கூறினார்.

சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில், பெட்ரோல் விலை (லிட்டருக்கு) ரூ.111, ரூ.118, ரூ.119, ரூ.115 மற்றும் ரூ.120க்கு மேல் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் ரூ.102க்கு மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அவர் கூறினார். 

மத்திய அரசு தனது வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது  முதல்வர்களுக்கு தான் அளிக்கும் வேண்டுகோள் என்று கூறினார்.

இந்நிலையில், உலகளவில் உரங்களின் விலை உயர்வு குறித்தும், இந்தியா அதன் இறக்குமதியை நம்பியிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com