திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஜஹாங்கீர்புரி வன்முறை: குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் மேற்கு வங்கத்தில் கைது

தில்லி ஜஹாங்கீர் புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் தில்லி காவல் துறையினரால் மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2022, 2:54 pm

DIN


தில்லி ஜஹாங்கீர் புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் தில்லி காவல் துறையினரால் மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி காவல் துறை இதுபற்றி கூறியதாவது:

"தில்லி காவல் துறை குழு இவரைக் கடந்த இரண்டு வாரங்களாகத் தேடி வருகிறது. மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. மேற்கு வங்கத்திலுள்ள சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவின் பல்வேறு குழுக்கள் அவரை இன்று அவரது உறவினர் கிராமத்தில் வைத்து கைது செய்தன.

ஜஹாங்கீர்புரி வன்முறைக்குப் பிறகு தப்பியோடிய அவர் தனது இடங்களை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர் மேற்கு வங்கத்தில் இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்."

இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல் துறை இதுவரை 3 சிறார்கள் உள்பட மொத்தம் 30 பேரைக் கைது செய்துள்ளது. முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை ஜாஃபர் மற்றும் பாபுதின் எனும் சகோதரர்களைக் கைது செய்தது தில்லி காவல் துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.