மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்

ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே இருப்பதாகவும் தில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்
மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்

தில்லியில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னைக்கு இடையே, தில்லிக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும், ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே இருப்பதாகவும் தில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு இல்லை... கையிருப்பு என்றால், 21 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருப்பது. ஆனால், தில்லிக்கு மின்சாரம் வழங்கும் பல அனமில் நிலையங்களில் ஒரு நாளைக்குத்தேவையான மின்சாரம் தயாரிக்கும் நிலக்கரியை விட குறைவானதே கையிருப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருக்கும் நிலையில், இந்த அபாயக் குரலை சத்யேந்திர ஜெயின் எழுப்பியுள்ளார்.

மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டால் அது தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். அப்போது எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு வேளை நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டால் நிலைமை மோசமடையும். நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. வழக்கமாக 21 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது பல அனல்மின் நிலையங்களில் ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com