
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,607 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி,
தேசிய தலைநகரில் புதிதாக பதிவான வழக்குகளையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 18,81,555 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் 2 கரோனா உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,174 ஆக உள்ளது. தலைநகரில் இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.
மருத்துவச் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,609 ஆக உயர்ந்துள்ளது. நேர்மறை விகிதம் 5.28 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,246 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 18,49,772 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 3,863 ஆக உயர்ந்துள்ளது.
நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 60,287 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.