ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.49 லட்சம் கோடி!

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.49 லட்சம் கோடி!

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை படைத்த நிலையில், மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி, ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடி வசூலானது. 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 1.49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.1,16,393 கோடியுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் முறையே ரூ.1.33 லட்சம் கோடி, ரூ.1,40 லட்சம் கோடி, ரூ.1.42 லட்சம் கோடியாக இருந்தது . 

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் வசூலான ரூ.1,48,995 ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,751 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,807 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.79,518 கோடியும், செஸ் ரூ.10,920 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com