'ஜெய் மகாராஷ்டிரா' ..நீதிமன்றத்தில் சஞ்சய் ரெளத் தொண்டர்களுக்காக கூறியது என்ன?

சிவசேனை கட்சியை உடைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது  என சிவசேனை மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் நீதிமன்ற வாயிலில் தொண்டர்களுக்காக முழங்கினார். 
நீதிமன்ற வாயிலில் சஞ்சய் ரெளத்
நீதிமன்ற வாயிலில் சஞ்சய் ரெளத்

சிவசேனை கட்சியை உடைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது  என சிவசேனை மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் நீதிமன்ற வாயிலில் தொண்டர்களுக்காக முழங்கினார். 

பணமோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சஞ்சய் ரெளத்தை அமலாக்கத் துறையினர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். இதனையொட்டி நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 

எனினும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த சிவசேனை தொண்டர்கள் சஞ்சய் ரெளத்தை நோக்கி ''ஜெய் மகாராஷ்டிரா'' என்று முழங்கினர்.  சஞ்சய் ரெளத் தனது சகோதரர் சுணில் ரெளத்திடம் பேசிக்கொண்டு வந்தார். 

பின்னர் தொண்டர்களை நோக்கி கையசைத்து பேசிய அவர், சிவசேனை கட்சியை உடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என தொண்டர்களை நோக்கி முழங்கினார். தொண்டர்களும் பதிலுக்கு ஜெய் மகாராஷ்டிரா என்று முழக்கமிட்டனர். 

நீதிமன்றத்தில் சஞ்சய் ரெளத் சார்பாக மூத்த வழக்குரைஞர் சோக் முண்டார்கி ஆஜரனார். வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே சஞ்சய் ரெளத்தை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com