5ஜி அலைக்கற்றை: 'முன்பு இறக்குமதி, தற்போது இந்தியாவில் உற்பத்தி'

அலைக்கற்றை உபகரணங்களை முன்பு வெளிநாடுகளிலிருந்து பெற்றதாகவும் தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
5ஜி அலைக்கற்றை: 'முன்பு இறக்குமதி, தற்போது இந்தியாவில் உற்பத்தி'

செல்லிடப்பேசிகளுக்கான அலைக்கற்றை உபகரணங்களை முன்பு வெளிநாடுகளிலிருந்து பெற்றதாகவும் தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் பாஜகவைச் சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையானது ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 72,098 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் பட்டியலிடப்பட்டதாகவும், அதில் 71 சதவிகித அலைக்கற்றையை (51,236 மெகா ஹொ்ட்ஸ்) நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்ததாகவும் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். 

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநில மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த 5ஜி அலைகற்றை ஏலம் நிறைவுபெற்றுள்ளது. ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகளை நிறுவனங்கள் கேட்டுள்ளன.

முன்பு 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற அலைக்கற்றைகளுக்கான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுவந்தோம். ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கான உபகரணங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்தை நோக்கிய மோடி அரசின் இலக்கில், ஏராளமான இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் உலக தரத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய சேவையை உறுதிப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com