ஆயுதப் படைகளில் எத்தனை பெண்கள்? மாநிலங்களவையில் தகவல்

மத்திய ஆயுதப் படைகளில் 34,151 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய ஆயுதப் படைகளில் 34,151 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய ஆயுதப் படைகளில் உள்ள பெண் வீராங்கனைகளின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

அதில், மத்திய ஆயுதப்படைகளில் மொத்தம் 34,151 பெண் வீராங்கனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,454, எல்லைப் பாதுகாப்புப் படையில் 7,391, மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் 9,320, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் 2,518, சஷாஸ்த்ரா சீமா பால் படையில் 3,610, அசாம் ரைப்பில்ஸில் 1,858 பெண்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com