காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள். அவர் முதல்வராக இருந்தபோது, அவரது 75 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
சித்தராமையாவின் பிறந்தநாள் மட்டுமின்றி இது கட்சி மாநாடாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. சுமார் 6 லட்சம் பேர் வரையில் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்! ஏன் தெரியுமா?
முன்னதாக, சித்தராமையாவின் 75 ஆவது பிறந்தநாளை நள்ளிரவு முதலே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். நேற்று நள்ளிரவு ஹூப்ளியில் உள்ள நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பீரை பீய்ச்சி அடிக்கும் ஒரு விடியோவும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”ஒரு குடும்பமாக செயல்படுகிறோம்!” பியூஷ் கோயல் | ADMK | BJP

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

திருச்சியில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

”காலாவதியானவர்களுக்கு திமுகவில் சீட்!” டிடிவி தினகரன் விமர்சனம்
வீடியோக்கள்

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

