இந்தியாவில் 348 சீன செயலிகள் முடக்கம்: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 348 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 348 சீன செயலிகள் முடக்கம்: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 348 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில்,  ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் மூலம் தரவுகள் திருடப்படுகின்றனவா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘சீன தயாரிப்புகளான 348 செயலிகள் தரவுகளைத் திருடியுள்ளன. அவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றோம். பின், அச்செயலிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர முடியாதபடி முடக்கியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

மேலும், தரவிறக்கம் செய்யப்பட்ட அச்செயலிகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com