குஜராத்: ராஜ்சந்திரா மிஷனின் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். 
குஜராத்: ராஜ்சந்திரா மிஷனின் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

ரூ.300 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. வல்சாத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஆசிரமத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தொடர்ந்து கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.200 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இது 250 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும். அதிநவீன மருத்துவ உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 

ஸ்ரீமத் ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். 

150 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, உயர்தர வசதிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துணைப் பணியாளர்களைக் கொண்ட பிரத்யேகக் குழுவைக் கொண்டிருக்கும். இது விலங்குகளின் பராமரிப்பு மற்றும் வழக்கமான மருந்துகளுடன் முழுமையான மருத்துவ சேவையை வழங்கும்.

இந்த நிகழ்வின் போது, ​​ஸ்ரீமத் ராஜ்சந்திரா பெண்களுக்கான சிறப்பு மையத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுவார். 

இது சுமார் ரூ.40 கோடி செலவில் பொழுதுபோக்கிற்கான வசதிகள், சுய மேம்பாட்டு அமர்வுகள் மற்றும் ஓய்வு பகுதிகளுக்கான வகுப்பறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதில் 700க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை வழங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com