சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? - ராகுல் காந்தி 

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, அதை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? - ராகுல் காந்தி 


நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, அதை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார் என்றும், சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. 

அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆக.5) மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. 

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

நாட்டில் இருக்கக்கூடிய 2,3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் மக்களுக்கான எந்த விவாதத்தையும் நடத்துவதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை எல்லாம் நம் கண் எதிரே அடித்து நொறுக்கப்படுகிறது.

நாட்டில் தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது. மக்களின் பிரச்னைகளை திசை திரும்புவதே மோடி அரசு நோக்கமாக உள்ளது. 

நான் எந்த அளவிற்கு மோடி அரசை எதிர்க்கிறனோ, அந்த அளவிற்கு தாக்கப்படுவேன். உண்மையில் நான் இப்படி தாக்கப்படும் போது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பிய ராகுல், அத்தனை சுதந்திரமான அமைப்புகளும் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என ராகுல் குற்றம் சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com